widget

Tuesday

தரையில்
 உதிர்ந்த
 மலராய் 
என்- வாழ்க்கை 

மனதில் 
பதிந்த 
வடுவாய் 
உன்- வாசம்...!

Sunday

பூத்தாலும் வாசம் வீசாது
வான் நட்சத்திரங்கள்
அதுபோலவே என்  காதலும்
இதயத்தில் பூத்தும் வாழ்க்கை
என்னும் வாசம் வீசவில்லை ....

எந்தன்  இதயத்தின்
துடிப்பு மட்டும் ஆறுதல்
சொன்னது கலங்காதே
மறு ஜென்மத்தில் சந்திக்கலாம் 

அப்போது சேர்ந்து வாழலாம் 
என்று ....

நடைமுறையில் இல்லாத போதும்
நம்பிக்கையோடு விடைபெற்றேன்
ஆனால் உள்ளம் மட்டும் எப்போதும்
உன் நினைவுகளுடனேயே ...!

Saturday


பார்க்கும் 
இடத்தில்
எல்லாம் 

"நீயே "....

தெரிகிறாய் 
கண்களை 
மூடிக்கொண்டால் 

"நீ "....

கனவாக 
வருகிறாய்...!

வெள்ளிகள் பூத்திருந்த 
வானிலே...
விழிகளோ  தேடுகிறது 
உன்னையே...

எந்த விண்மீனை 
உனக்காக பறிக்கலாம் 
என்று  எண்ணியிருந்தவேளை
விண்ணை விட்டு  ஓடும் 
விடிவெள்ளியொன்று கண்டேன் 

அழகிய விண்மீனே
ஒரு நிமிடம் நில்லு...!

எனக்காக.....
ஒரு உதவி செய்வாயா 

என்னவளை கண்டால் -நான் 
அவளை நினைத்தேன்-என்று 
  சாட்சிசொல்....!

சல சல வென 
இலைகள்...
தலையாட்டுகிறதே


விடு விடு  என
தென்றல்....
விளையாடுகிறதே


காற்றுக்கும், இலைக்கும்
அப்படி என்ன காதல்...!
 சுவாசம் தந்து
இதயம் பறித்து சென்ற
இனியவளே!


அறிவாயோ ஒரு சேதி...


உன் நினைவுகள்
என்னும் ஆகுதிக்குள்
வீழ்த்து துடிக்கும்
தருணங்களில்


என் கண்ணீரின்
ஆழம் அறிந்த
என் "பேனா"


என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...!
 மேகத்தின் தேடல்கள் 
வானத்தில் முடிந்தாலும்,
நேசத்தின் தேடல்கள்
முடியாதது..!
 
மாதங்கள் மாறட்டும். 
வருஷங்கள் தீரட்டும்.

விதி போட்ட 

கோலங்கள்....
அழியாதது!

வழியெல்லாம் பூப்போல பூத்திருப்பேன்.
உன் வருகைக்கு எந்நாளும் காத்திருப்பேன்.

பூத்திருக்கும் இதயத்தில் 
காத்திருக்கும்  என் கனவுகள்....

அன்பு கொண்ட என் நெஞ்சத்தில்
உன் நேசத்தின் நினைவுகள்...

என்றும் அழியாத கல்வெட்டுகள்..!








Friday

சொல்லாத வார்த்தைகளை
சொல்லி சொல்லி பார்ப்பதால்
அள்ளி அள்ளி ஆனந்தம் ....

எண்ணம் தாண்டி வண்ண
வண்ணமாய் கண்ணில் பூத்து
காதில் பேசுகிறது ஊமை
காதலாய் ....

மண்ணில் பூக்கும் செடியாய்
மலரும் பாசம் ஒரு நாள்
சொல்லாமலே உதிர்கிறது

அவள் இன்னொரு சொந்தமாய்
மண்ணில் மறையும்போது
கல்லறை காவியமாய் ...
நித்தம் நித்தம் 
உன்னை நினைத்து 
என் இதயம் 
தீயாய் எரிகிறது...!

அந்த சாம்பலும் 
உன்னைத்தேடி 
காற்றோடு வருகிறது......

அதை தூசு என 
நினைத்து தட்டி விடாதே
அது காலில் விழுந்தாலும் 
கண்ணீர் விடும்...

அதுதான் உண்மைக்காதல்..!