உன்னை நினைக்காத நாள்ளிலை.....!
<a href="http://www.widgeo.net">widget</a>
Monday
என்
இரவோடும்
பகலோடும்
தொடர்கின்ற
நினைவிவளோ
என்
உயிரோடும்
மனதோடும்
ஒன்றித்த
உறவிவளோ
உன்னை
நினைக்கையில்
உள்ளம்
வருடுதம்மா
உன்னை
பிரிகையில்
நெஞ்சம்
நொருங்குதம்மா
என்
தாய் அன்பும்
தோத்ததுவோ
உன்னிடம்
தவிப்பினில்
ஏங்குது
என்
மனம்!!
உன் ஒருநாள்
பிரிவில்
உணர்ந்தேன்
உன் நினைவுகள்
என்னதான்
சுகமெனினும்
உன் நிஜத்தையே
விரும்புகிறது
என் இதயம் -என்று!
Sunday
உன் நினைவுகள் சுமந்த
என் இதயம் என்னை
பார்த்து கேக்கிறது
உன்னை நேசிக்க ஆயிரம்
உறவுகள் அருகில்
இருந்தும்
எதற்காய் ஆயிரம் மைல்கல்
தாண்டி வாழும்
ஒருத்தியை நேசிக்கிறாய் என்று
அதனிடம் நான் எப்பிடி
சொல்வேன்
இதுதான் காதல் என்று!!
Saturday
விரும்பியே ஒரு முறைதான்
இதயம் துலையும்
வாழ்வோ சாவோ
உன்னோடுதான்
நீ -என் காதலை
ஏற்றுகொண்டாலும்
ஏற்றுகொள்ள மறுத்தாலும்
என்றும் உன்னுடனே என் காதல்!
Friday
உன் இதயத்தில்
நீ விரும்பிய
உன்னவனாய்
நான்
ஒரு நிமிடம் வாழ்ந்திருந்தால்
அதுவே என் காதலுக்கு
கிடைத்த...
மிக சிறந்த பரிசு...!
காதல் ஆணவம்
என்னில் தோன்றுதே
பூமி ஓர் கணம்
நின்று போனதே
இரவோடு பேசும் நிலவோ -இல்லை
மழையோடு வீசும் புயலோ
இது என்ன மாஜம்
தேவலோகம் என் முன் தோன்றுதே..!
இமைகளில்
தோன்றி
இதயங்களில்
மலர்ந்து
என்றோ
ஒரு நாள்
சுகமான சுமையுடன்
இனிதே நிறைவேறுவது
காதல்...!
என்
உடலும்
உள்ளமும்
உள்ளவரை
உன்
உன்னத
நினைவுகள்
என்
இதயகரையில்
அலை மோதிகொண்டே இருக்கும்..!
Thursday
மறந்திட்டியா?
காதல் ஒரு போர்
முகம்தானோ
என் மனம்
கேக்குது இங்க
நாணல் கொண்ட
பெண்மைதானோ
சாரலை தூண்டுது
இங்கே
வான்முகில் மேகங்கள்
பாசுரம் பாட
என் மன கோயிலில்
உயிர் என கலந்தது ஏனோ
...!
என்னவள் இதழ் விரித்து சிரித்தால்....
தாமரையும் வெக்கித்து தலை குனியும்
வாய் திறந்து மொழி பேசுகையில்
அவள் குரல் இசை கேட்டு
வண்ண குயிலும் தலையாட்டும்...
குயில் இசையும் தோத்ததோ இவளிடம்!
Saturday
உடலை விட்டு உயிர் பிரிந்தாலும்
உன் நினைவுகளை என் நெஞ்சில் சுமந்து
என்றும் உன்னையே காதலிப்பேன்.....!
"நீ"
நிஜங்களாய் தந்த கனவுகள்
எந்தன் நினைவில்
உயிராய் - நீளுதே
என் நறுமலர்ப் பூவின்
ஒருமுகப் பார்வை- என்
உயிர்வரை தீண்டுதே,
கார்முகில் மழை,
வானவில் பிறை
,
நீல வானமும் நீதான் -என் உயிரே!
பாதை வழி ஆயிரம் பூக்கள்
என் மனம் சிலிர்த்ததும் -இல்லை
தேவதை பூ ஒன்று வந்து..
என் விதி மாத்தியதேனோ!
காதலால் என் மனம் வெந்திடும் -எண்டு
கனவிலும் கற்பனை செய்ததும் இல்லை
தனிமையே நிலையென ஆனா பின்பு!
உன் நினைவொன்றே நிஜமென -கொண்டு
வெறுமையில் என் துயர் தொடருது -இங்கு!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)